மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

வோடபோன் ஐடியா கட்டணங்களும் அதிகரிப்பு!

வோடபோன் ஐடியா கட்டணங்களும் அதிகரிப்பு!

ஏர்டெல்லைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் புதிய கட்டண உயர்வுக்கான திட்டங்களை அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் கட்டண விகிதங்களை அதிகரித்து இருந்தது. இதுகுறித்த விரிவான செய்தியை, கட்டணங்களை உயர்த்தும் ஏர்டெல் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நேற்று வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனமும் பிரீபெய்டு சேவைக்கான கட்டணங்களை 20-25 சதவிகித அளவுக்கு உயர்த்தி அறிவித்துள்ளது. டாப் அப் திட்டங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. 28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரூ.79 திட்டம் ரூ.99 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 48 ரூபாய் திட்டம், 58 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 3 ஜிபி டேட்டா கிடைக்கும்.

98 ரூபாய் திட்டம், 118 ரூபாயாகவும், 251 ரூபாய் திட்டம், 301 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இலவச கால் வசதியுடன் கூடிய டேட்டா திட்டத்துக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

28 நாட்கள் கொண்ட 298 ரூபாய் திட்டம் 359 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ், தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

399 ரூபாய் திட்டத்தை, 479 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.

379 ரூபாய் திட்டத்தை, 455 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவும் 84 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் 6 ஜிபி டேட்டா கிடைக்கும்.

598 ரூபாய் திட்டத்தை 719 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவும் 84 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ், தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.

698 ரூபாய் திட்டத்தை, 839 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவும் 84 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ், தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

1,498 ரூபாய் திட்டத்தை 1,799 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். அன்லிமிடெட்டு கால் சேவை, தினசரி 100 எஸ்எம்எஸ் 24 ஜிபி டேட்டா கிடைக்கும்.

2,498 ரூபாய் திட்டத்தை 2,999 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். அன்லிமிடெட்டு கால் சேவை, தினசரி 100 எஸ்எம்எஸ், தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஏர்டெல் நிறுவனம் விலை உயர்வு அறிவித்த நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனமும், புதிய கட்டண உயர்வு பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில் வருகிற நாளை (நவம்பர் 25) முதல் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான புதிய கட்டண முறைகள் நடைமுறைக்கு வருகின்றன.

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

புதன் 24 நவ 2021