மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

உச்சத்தில் காய்கறி விலை இப்போதைக்குக் குறையாது!

உச்சத்தில் காய்கறி விலை இப்போதைக்குக் குறையாது!

பெட்ரோல், டீசல் விலையைவிட அதிகமாக உயர்ந்து வருகிறது காய்கறி விலை. தக்காளி கிலோ 120 ரூபாய், முருங்கைக்காய் 140, அவரைக்காய் 90, வெண்டைக்காய் 100, பீன்ஸ் 80, கேரட் 70, இஞ்சி 70, கொத்தமல்லிக் கட்டு 40, புதினா 20 ரூபாய் என்று விற்பனையாகிறது.

இதற்கான காரணம் என்ன, விலையேற்றம் எப்போது குறையும் என்பது குறித்து பேசியுள்ள சென்னை, கோயம்பேடு மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க ஆலோசகரும், உருளைக்கிழங்கு மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவருமான சௌந்தரராஜன், “சென்னைக்குக் காய்கறிகள் அனுப்பும் ஆந்திரா, கர்நாடகா, தமிழகப் பகுதிகளில் கடும் மழை காரணமாக காய்கறி சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் லாரிகள் வரும் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் லாரிகளில் கோயம்பேடுக்கு லோடு வருவதே பெரும் பாடாக இருக்கிறது. அப்படியே வந்தாலும் குறைவாகத்தான் வருகிறது. சரி... பாதிக்கப்பட்ட பகுதிகளை விடுத்து மற்ற பகுதிகளிலிருந்து காய்கறிகளை வரவழைக்கலாம் என்று விசாரித்தாலும் அங்கேயும் நிலைமை இதுவாகத்தான் இருக்கிறது. சென்னை மட்டுமில்லை; தமிழகம் முழுக்க காய்கறிகளின் நிலைமை இதுதான்.

தக்காளி, அவரைக்காய், கத்திரிக்காய் சாகுபடி செய்திருந்த வயல்களில் தண்ணீர் தேங்குகிறது. சில இடங்களில் வயல்களே மழைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்குவதால் அறுவடை செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. இதுமட்டுமில்லாமல் இன்னும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதனால், இதெல்லாம் சீரடைய எப்படியும் ஒரு மாதம் ஆகிவிடும். அதுவரை இந்த விலை உயர்வு இப்படித்தான் இருக்கும். எனவே அதற்கேற்றவாறு மக்கள் தங்கள் வீடுகளில் சமைக்கும் முறைகளை மாற்றியமைத்துக் கொள்வது நல்லது.

வரும் காய்கறிகளில் ஒன்றிரண்டு விலை குறைவாக இருக்கும். அதை வைத்து சமாளித்துக் கொள்ளவும். ஆனால், எக்காரணம் கொண்டு காய்கறி சப்ளை தடைபடாது” என்று விளக்கமளித்துள்ளார்.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

புதன் 24 நவ 2021