மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

தலைக்கு ஹெல்மெட் சமையலுக்கு தக்காளி!

தலைக்கு ஹெல்மெட் சமையலுக்கு தக்காளி!

சேலத்தில் ஹெல்மெட் ஒன்று வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல்,டீசல், சிலிண்டர் விலை உயர்வுக்கு கவலைப்பட்டு வந்த மக்கள், தற்போது தக்காளி விலை உயர்வை நினைத்து கவலையில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் கிலோ கணக்கில் வாங்கி செல்லப்படும் தக்காளி தற்போது பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. கடும் விலை உயர்வால் தக்காளி இல்லாமல் என்ன குழம்பு செய்யலாம் என்று கூகுளில் தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தக்காளி விலை உயர்வு தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

அதேசமயம், தக்காளி விலை உயர்வை கட்டுபடுத்தும் வகையில் பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.80க்கு விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தக்காளி விலை உயர்வை முன்னிட்டு சில கடைகள் இலவச ஆஃபர்களை அறிவித்து வருகின்றன.

நேற்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் உள்ள ஆம்பூர் பிரயாணிக் கடை உரிமையாளர் ஆஃபர் ஒன்றை அறிவித்தார். அதாவது இரண்டு பிரியாணி வாங்கினால் அரைக்கிலோ தக்காளி இலவசம், ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என்ற அறிவிப்பை தொடர்ந்து பலரும் கடையில் குவிந்தனர்.

தொடர்ந்து இன்று சேலம் மாவட்டம் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜம் ஜம் ஹெல்மெட் கடை 'தலைக்கு ஹெல்மெட் முக்கியம், சமையலுக்கு தக்காளி முக்கியம்' என்ற சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. ரூ.449க்கு ஹெல்மெட் ஒன்று வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும். இச்சலுகை நாளை வரை மட்டுமே என்று அக்கடை உரிமையாளர் முகமது காசிம் தெரிவித்துள்ளார். இந்த கடையில் விற்பனையை நடிகர் பெஞ்சமின் தொடங்கி வைத்தார்.

முகமது காசிம், இதற்கு முன்பு கடந்த ஆண்டு வெங்காயம் விலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்த போது, ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாகவும், கடந்த மாதத்தில் ஹெல்மெட் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாகவும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

புதன் 24 நவ 2021