மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

அரசு விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அரசு விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அரசு விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு, ஐந்து பள்ளி மாணவர் விடுதிகள், மூன்று பள்ளி மாணவிகள் விடுதிகள், மூன்று கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர் விடுதிகள், மூன்று கல்லூரி பாலிடெக்னிக் மாணவி விடுதிகள் செயல்படுகின்றன. பள்ளி விடுதிகளில் நான்காம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி பாலிடெக்னிக் விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக் மாணவர், மாணவிகளும் சேரலாம்.

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல், அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணகளுக்கு சிறப்பு வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். விடுதிகளில் சேர்வதற்கு, பெற்றோர் (அ) பாதுகாவலரின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிமீ தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் இருந்து இலவசமாகப் பெற்று பூர்த்தி செய்து, நாளை 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

புதன் 24 நவ 2021