மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

பாதி கிணற்றை தாண்டிய சென்னை மக்கள்!

பாதி கிணற்றை தாண்டிய சென்னை மக்கள்!

சென்னையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளும், திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,” சென்னையில் 50 சதவிகிதம் பேர் முழுமையாக இரண்டு டோஸ்களையும் செலுத்தியுள்ளனர். சென்னையில் தடுப்பூசி செலுத்த தகுதியான 55 லட்சத்து 30 ஆயிரம் பேர் உள்ள நிலையில் 82 சதவிகிதம் பேர் முதல் தவணையும் , 54 சதவிகிதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

இதுவரை 12 சதவிகிதம் பேர் ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளவில்லை. இரண்டாம் டோஸ் செலுத்த வேண்டிய 28 சதவிகிதம் பேர் இன்னும் தடுப்பூசியை செலுத்தி கொள்ளாமல் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில், “லண்டன், தென் ஆப்பிரிக்கா, சீனா, நியூசிலாந்து, பிரேசில், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்தியிருக்க வேண்டும். அதாவது, இரண்டு டோஸ்களையும் செலுத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம். விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகிய இடங்களில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

புதன் 24 நவ 2021