மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

ரேஷன் அரிசி கடத்தல் : 3897 பேர் கைது!

ரேஷன் அரிசி கடத்தல் : 3897 பேர் கைது!

கடந்த ஆறு மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 3897 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் வழங்கி வருகிறது. ஆனால், ஒருசில கடைகளில் மக்கள் வாங்காமல் மீதம் இருக்கும் விலையில்லா அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்கப்படுகின்றனர். அதுபோன்று பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, சட்டவிரோதமாக வேறு மாநிலத்திற்கு கொண்டு சென்று கூடுதல் விலைக்கு விற்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கடத்தல், பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்க, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை இயக்குநர் ஆபாஸ்குமார் உத்தரவின்பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் பல குழுக்களாக பிரிந்து தமிழ்நாடு முழுவதும் தீவிர தணிக்கை மற்றும் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,” சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2828 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3,804 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3897 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 637 வாகனங்கள்பறிமுதல் செய்யப்பட்டன.

மண்ணெண்ணெயை கள்ளச்சந்தையில் விற்றது தொடர்பாக 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15,780 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலப்பட டீசல் சம்பந்தமாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,24,246 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு பயன்படுத்தப்பட்ட 39 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

புதன் 24 நவ 2021