மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

நீதிமன்றத்துக்கே இந்த நிலை!

நீதிமன்றத்துக்கே இந்த நிலை!

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற இதுவரை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாகப் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மழைநீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டன. இருப்பினும் இன்னும் சில இடங்களில் தேங்கிய மழைநீர் வடியாமல் உள்ளன. இதன்மூலம் கொசு உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில் மதுரை புதுத்தாமரைப்பட்டி பகுதியில் பெரியாறு - வைகை பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து தனியார் நிறுவனத்தினர் கட்டியுள்ள குடியிருப்பு சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிடக் கோரி புதுத்தாமரைப்பட்டி சேர்ந்த ராமேஸ்வரி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று (நவம்பர் 23) நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பெரியாறு - வைகை பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு சம்பந்தமான புகைப்படங்களையும், வருவாய் ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

அவற்றை பார்த்து அதிருப்தி அடைந்த நீதிபதிகள், கால்வாயில் தண்ணீர் செல்ல வழியின்றி ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையா என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், மதுரை உயர் நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் கழிவுநீர், மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் செல்ல வழி இல்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் தெரிவித்தோம். போனில் தொடர்பு கொண்டும் இந்தப் பகுதியை கவனத்தில் கொள்ளுமாறு தெரிவித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

நீதிபதிகளான நாங்கள் தெரிவித்த போதும் ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத்திற்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் நிலை என்ன என்பது தெளிவாகிறது. கொரோனா போன்ற தொற்று நோய்களை தேடி செல்ல வேண்டாம். இங்கேயே உற்பத்தி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இறுதியாக, வைகை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை இரண்டு வாரத்தில் அகற்ற வேண்டும். இல்லையென்றால் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக நேரிடும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

-வினிதா

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

புதன் 24 நவ 2021