Tரிலாக்ஸ் டைம்: கோதுமை ரவை சாலட்!

public

நீரிழிவாளார்கள், டயட்டில் இருப்பவர்கள் ரிலாக்ஸ் டைமில் கோதுமை ரவையை கிச்சடி, உப்புமா என்று சாப்பிடாமல் இப்படி காய்கறிகள் சேர்த்து சாலட் போல் செய்து சாப்பிடலாம்.

**எப்படிச் செய்வது?**

இரண்டு டேபிள்ஸ்பூன் அளவுக்கு கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு வெங்காயம், ஒரு வெள்ளரிக்காய், ஒரு தக்காளி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும். பாதியளவு புரொக்கோலியை பெரிய பூக்களாக வெட்டிக்கொள்ளவும். கால் கப் கோதுமை ரவையை நன்றாகக் கழுவி, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு குழையாமல் உதிரியாக வேகவைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய குடமிளகாய், மூன்று பூண்டுப் பற்கள், புரொக்கோலி ஆகியவற்றை லேசாக, நிறம் மாறாமல் வதக்கவும். பிறகு, வதக்கிய குடமிளகாய், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். புரொக்கோலியை நறுக்கத் தேவையில்லை. வேகவைத்த கோதுமை ரவை, காய்கறிகள், தேவையான அளவு உப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து அதன்மேல் வறுத்து நீளமாக நறுக்கிய சிறிதளவு பாதாம்பருப்பைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

**சிறப்பு**

நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் பி கோதுமை ரவையில் நிறைந்துள்ளது. இது உடலில் மெதுவாக உடைக்கப்பட்டு மெதுவாக கரைவதால் எடை குறைப்புக்கு சாத்தியமாகிறது. உடலில் இருக்கும் அதிக கொழுப்பைக் கரைத்து வெளியேற்றவும் செய்கிறது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *