மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 நவ 2021

தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை!

தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை!

தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழப்புகளும் மற்றும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இடைவிடாது பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஒன்றியக் குழு நேற்று முதல் ஆய்வு செய்து வருகிறது. இன்னும் சில இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த முறை உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் ஏரி, குளங்கள், அணைகள் அனைத்தும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் சிக்கின.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் 25ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று (நவம்பர் 22) வெளியிட்ட அறிவிப்பில், "அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும். குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் இலங்கை, தென் தமிழ்நாட்டை நோக்கி நகரும். புதிய குறைந்த காற்றழுத்தப் பகுதியால் வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் நவம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரே மாதத்தில் வங்கக்கடலில் உருவாகும் மூன்றாவது காற்றழுத்த தாழ்வு பகுதியாகும். இது புயலாக வலுப்பெறுமா, தாழ்வு மண்டலமாக மாறுமா என்று இப்போது கணிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கு எச்சரிக்கை விட்டிருப்பதால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். மழையினால் ஏற்படும் வெள்ளம் ஒருபக்கம் என்றால், காய்கறிகளின் வரத்து குறைவினால் விலை உயர்வு அதிகரிக்கும் என்றே மக்கள் அதிக அளவில் கவலை கொள்கின்றனர். தற்போது எந்த காய்கறியும் 100 ரூபாய்க்கு குறைந்து விற்கப்படுவதில்லை. ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வினால் சில்லறை கடை வியாபாரிகளே காய்கறிகளை வெறும் ஒரு கிலோ, அரை கிலோ என்ற அளவில் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

-வினிதா

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

செவ்வாய் 23 நவ 2021