மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 27 அக் 2021

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிதாக அரசு பணியில் சேரும் அரசு பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பவானிசாகரில் உள்ள அரசு அலுவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நிலையை மாற்றி அரசு பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற பேரவையில் விதி எண் 110ன் கீழ் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “புதிதாக அரசு பணியில் சேருபவர்களுக்கும், பதவி உயர்வு பெறுபவர்களுக்கும் அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்கப்படும். பவானிசாகர் சென்று பயிற்சி பெறும் நிலை தவிர்க்கப்பட்டு, தாமதமின்றி அரசு ஊழியர்கள் உரிய காலத்தில் தங்களுக்குரிய தகுதி காண பருவம் முடித்தல் மற்றும் பதவி உயர்வு பெறுவது உறுதி செய்யப்படும்.

அனைத்து மாவட்டங்களுக்கும் பவானிசாகர் பயிற்சி மையத்திலிருந்து அதிகாரிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடிப்படை பயிற்சிகளை வழங்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி பெற வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், மாவட்ட வாரியாக 37 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படை பயிற்சியினை அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

புதன் 27 அக் 2021