மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 அக் 2021

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

தீபாவளி போனஸ் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து மற்றும் மின்வாரிய தொழிற்சங்கங்கள் இன்று(அக்டோபர் 25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையொட்டி பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 8.33 போனஸ், 1.67 சதவீதம் கருணைத் தொகை என 10 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு பொதுத் துறை ஊழியர்களிடையே மிகுந்த அதிருப்தியையும், ஏமாற்றத்தையும்

ஏற்படுத்தியுள்ளது.

தொழிற்சங்கத்திடம் எவ்வித ஆலோசனையும் கேட்காமல் தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக முடிவு செய்து தீபாவளி போனஸை அறிவித்துள்ளது. போனஸ் விஷயத்தில் அதிமுகவின் நிலைப்பாடே தற்போதும் தொடர்கிறது என்று கூறி போனஸ் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று(அக்டோபர் 25) சிஐடியு தொழிற்சங்கம் சார்பில், 10 சதவிகித தீபாவளி போனஸ் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து போக்குவரத்து கழக பணிமனைகளில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அதுபோன்று,இதே கோரிக்கையை முன்னிறுத்தி மின்வாரிய பணியாளர்கள் இன்று காலை அனைத்து பிரிவு அலுவலகங்கள் முன்பும், மதிய உணவு இடைவேளையின்போது கோட்ட அலுவலகம் முன்பும், மாலை வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று மின்வாரிய தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு தீபாவளிக்காக 10%, அதாவது ரூ. 8400 மட்டும் தான் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு இது போதுமானதல்ல என்று அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

திங்கள் 25 அக் 2021