மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 19 அக் 2021

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் பெயரைக் குறிப்பிட்டு சொல்லுங்கள்; கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால், சென்னையில் தங்கியிருக்கும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவ்வாறு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுபோன்ற பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது.

இந்நிலையில், இன்று(அக்டோபர் 19) மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்,”தீபாவளி பண்டிகையின்போது தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும். முதல்வரின் உத்தரவின்பேரில், ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது , அதைத் தாண்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த வாகனம் அதிக கட்டணம் வசூலிக்கிறது என்பதை குறிப்பிட்டு சொன்னால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாநகர பேருந்துகளில் எந்தவிதமான ஒழுங்கின செயல்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது பேருந்துகளில் நடக்கும் குற்றங்களை கண்டுபிடிக்க காவல்துறைக்கும் உதவியாக இருக்கும். 2900 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கேமரா பொருத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

செவ்வாய் 19 அக் 2021