கிச்சன் கீர்த்தனா: மட்டன் கொத்துக்கறி!

public

கொரோனா தளர்வுகள் குறைந்து அனைத்து ஹோட்டல்களும் திறந்திருக்கும் நிலையில், விதவிதமான ஹோட்டல்களுக்குச் சென்று வித்தியாசமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து ருசித்து மகிழ்ந்தவர்கள், அடுத்து எந்த ஹோட்டலுக்குச் சென்று எந்த உணவை ருசிக்கலாம் என்று பட்டியலிடுவார்கள். அப்படிப்பட்டவர்களின் தேவைக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த மட்டன் கொத்துக்கறி பெஸ்ட் சாய்ஸ்.

**என்ன தேவை?**

கொத்துக்கறி – கால் கிலோ

சின்ன வெங்காயம் – 200 கிராம்

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

பட்டை – ஒரு துண்டு, கிராம்பு – 4

மஞ்சள்தூள் – சிறிதளவு

பூண்டு – 10 பல் (தட்டிக்கொள்ளவும்)

உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

**எப்படிச் செய்வது?**

மட்டன் கொத்துக்கறியை இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். தண்ணீரை இறுத்து கொத்துக்கறியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சோம்புத்தூள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வேகவைத்த கொத்துக்கறியைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும். பச்சை வாசனை போனதும் இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

**[நேற்றைய ரெசிப்பி: ஹைதராபாத் மட்டன் பிரியாணி](https://www.minnambalam.com/public/2021/10/18/1/Hyderabad-mutton-biriyani)**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *