மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 17 அக் 2021

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி பிறக்க உள்ளதால், பிற மண்டலங்களில் முட்டை நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு முட்டை விலையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல்லில் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது முட்டை தொழில். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் மூலம் நாள் ஒன்றுக்கு 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம், வெளிமாநிலத்துக்கு முட்டை விற்பனை செய்யப்படுகின்றன. மார்க்கெட்டில் விற்பனை நிலவரங்கள் மற்றும் சூழ்நிலைகளை பொறுத்து முட்டை விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயம் செய்து வருகிறது.

இந்த நிலையில் புரட்டாசி மாதம் பலர் வீடுகளில் முட்டை மற்றும் அசைவ உணவுகளை தவிர்ப்பது வழக்கம். இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் மாற்றமின்றி ரூ.4.20 ஆக நீடித்தது. தற்போது புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி பிறக்க உள்ளதாலும், பிற மண்டலங்களில் முட்டை நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு முட்டை விலையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. பிற மண்டலங்களில் முட்டை விலை ஆமதாபாத்தில் ரூ.4.50, சென்னையில் ரூ.4.30, சித்தூரில் ரூ.4.23, மும்பையில் ரூ.4.63, மைசூரில் ரூ.4.40, விஜயவாடாவில் ரூ.4.23 ஆக உள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் தற்போது ஒரு முட்டையின் விலை 5 ரூபாயாக விற்கப்படுகிறது. இந்த விலை மாற்றத்தில் முட்டையின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் செல்வராஜ்,``இந்தியா முழுவதும் முட்டை உற்பத்தியைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. முட்டை உற்பத்தி அதிகரிக்கும்போது விலை குறையும். முட்டை உற்பத்தி குறையும்போது விலை அதிகரிக்கும். இந்த சீசனில் தமிழகத்தில் மட்டும் 3.25 கோடி முட்டை உற்பத்தியாகும். ஆனால், தற்போது 2.75 கோடி முட்டைகள்தான் வருகிறது. முட்டை உற்பத்தி குறைந்துள்ளதால் விலை உயரும்.

முட்டைகளின் விலை போக்குவரத்து செலவு, முட்டை அளவு மற்றும் கடைகளைப் பொறுத்து அதாவது முட்டை மட்டுமே விற்பனை செய்யும் கடைகளுக்கும், மற்ற பொருள்களோடு சேர்த்து முட்டையை விற்பனையாகச் செய்யும் மளிகைக் கடைகளுக்கும் விலை மாறுபடும். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு கடைகளிலும் முட்டையின் விலை மாறுபட்டு இருக்கும்'' என்றார்.

-ராஜ்

.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 17 அக் 2021