மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 அக் 2021

கிச்சன் கீர்த்தனா: உருளைக்கிழங்கு கம்பு தட்டை

கிச்சன் கீர்த்தனா: உருளைக்கிழங்கு கம்பு தட்டை

அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச்சத்து என பல உயிர்ச்சத்துகள் கம்புவில் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது. தோலுக்கும், பார்வைக்கும் அவசியமான வைட்டமின் கே உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. வேண்டாத கொழுப்புகளைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கும் கம்பு, நீரிழிவாளர்களுக்கும் கம்பு ஒரு வரப்பிரசாதம். இந்த விஜயதசமி நன்னாளில் இந்த கம்பு தட்டை செய்து சாப்பிட்டு நம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

என்ன தேவை?

உருளைக்கிழங்கு - 3 (வேகவைக்கவும்)

கம்பு - அரை கப் (வேகவைக்கவும்)

பிரெட் - 2 ஸ்லைஸ்

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - அரை டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு கப் (பொரிக்க)

கரைத்து வைக்க -

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - கால் கப்

மைதா - கால் கப்

மிளகு - கால் டீஸ்பூன் (பொடிக்கவும்)

எப்படிச் செய்வது?

பிரெட்டைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, வேகவைத்த கம்பு, பிரெட், நறுக்கிய பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். இன்னொரு சிறிய பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், மைதா மாவு, மிளகுத்தூள் ஆகியவற்றைக் கொஞ்சம் தண்ணீர்விட்டுக் கரைத்து வைக்கவும். பின்னர், பிடித்து வைத்த உருண்டைகளைக் கைகளில் தட்டையாகத் தட்டி, கரைத்து வைத்திருக்கும் மாவுக் கலவையில் தோய்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். தவாவில் எண்ணெய்விட்டு இதை வறுத்தும் எடுக்கலாம்.

நேற்றைய ரெசிப்பி: குதிரைவாலி சாம்பார் சாதம்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 15 அக் 2021