மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 14 அக் 2021

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

சென்னையில் சைக்கிளில் ரோந்து பணி மேற்கொண்டபோது விபத்தில் சிக்கி காயமடைந்த தலைமைக் காவலரின் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்த காவல் ஆணையர், அவருக்கு ஒரு புதிய சைக்கிளை பரிசளித்தார்.

E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் செந்தில்குமார்(44) என்பவர் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். காவலர் செந்தில்குமார் தினந்தோறும் சைக்கிளிலேயே ரோந்து பணி மேற்கொள்வது வழக்கம்.அதுபோன்று, நேற்றுமுன்தினம்(அக்டோபர் 12) மதியம் 12.30 மணியளவில், பணியின்போது, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, அண்ணா அறிவாலயத்திலிருந்து, காவல் நிலையம் நோக்கி சைக்கிளில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த இருசக்கர வாகனம், தலைமைக் காவலரின் சைக்கிள் மீது மோதியதில், இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.

இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர் செந்தில்குமாருக்கு பரிசோதனை செய்தபோது, இடது தோள்பட்டை அருகே எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. எலும்பு முறிவுக்கான சிகிச்சை பெற்ற காவலர் செந்தில்குமார், தற்போது மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஆலந்தூர், M.K.N. சாலையிலுள்ள காவலர் குடியிருப்பிற்கு சென்ற, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அங்கு வசித்து வரும் தலைமைக் காவலர் செந்தில்குமாரை நேரில் சந்தித்து, காயம் குறித்து கேட்டறிந்து நலம் விசாரித்தார். பின்னர் மருத்துவ பரிசோதனைகள்,எக்ஸ்ரே உள்ளிட்டவைகளை பார்வையிட்டு மருத்துவ ஆலோசனைப்படி நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

செந்தில்குமார் பயன்படுத்தி வந்த சைக்கிள் விபத்தில் சேதமடைந்ததால், அவருக்கு புதிய சைக்கிளை பரிசாக கொடுத்து வாழ்த்தினார்.

-வினிதா

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

வியாழன் 14 அக் 2021