மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 13 அக் 2021

மதுரை டு திருப்பதி: முதல் விமான சேவை!

மதுரை டு திருப்பதி: முதல் விமான சேவை!

வருகின்ற நவம்பர் 19ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து திருப்பதிக்கு தினந்தோறும் விமானம் இயக்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மதுரையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை வழங்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த கோரிக்கையை இண்டிகோ நிறுவனம் நிறைவேற்றியுள்ளது. வரும் நவம்பர் 19ஆம் தேதி மதுரையிலிருந்து திருப்பதிக்கு தினமும் விமானம் இயக்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

விமானமானது, மதியம் 3 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சரியாக 4:20 மணிக்கு திருப்பதியை சென்றடையும். அதைத் தொடர்ந்து 4:40க்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு மாலை 6:40 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு 20 விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

புதன் 13 அக் 2021