மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை பெற்ற குற்றவாளிக்கு இந்த ஆஃபர்!

ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை பெற்ற குற்றவாளிக்கு இந்த ஆஃபர்!

ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை பெற்ற குற்றவாளிகள் புத்துணர்வு பெறுவதற்காக, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடும் வகையில் விடுப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்களின் மகனுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக, குற்ற வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 54 வயதான தனது கணவர் பி.நாகேந்திரனுக்கு ஒரு மாத விடுப்பு வழங்கக் கோரி சிறைக் கண்காணிப்பாளரிடம் அவரது மனைவி மனு அளித்திருந்தார். நாகேந்திரன் மீது ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் மற்றொரு குற்ற வழக்கு விசாரணையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி விடுப்பு வழங்க சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்து கணவருக்கு விடுப்பு வழங்கக் கோரி நாகேந்திரனின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று (அக்டோபர் 7) நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விடுப்பில் செல்வதை குற்றவாளிகள் உரிமையாக கோர முடியாது என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதற்காக தண்டனை காலம் முழுவதும் விடுப்பு வழங்காமல் மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் வைத்து, மறுமலர்ச்சி பெறுவதற்கான வழியை தடுக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர்.

ஒன்றும் மேற்பட்ட வழக்கு உள்ளவர்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது என்று கூறிய நீதிபதிகள், ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை பெற்ற குற்றவாளிகள் புத்துணர்வு பெறுவதற்காக, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடும் வகையில் விடுப்பு வழங்க வேண்டுமென சிறைத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், நாகேந்திரன் மீதான மற்றொரு வழக்கு நிலுவையில் இருப்பதாலேயே அவரை விடுப்பில் செல்ல அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவு சரியென குறிப்பிட்டு, நாகேந்திரனின் மனைவி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-வினிதா

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

வெள்ளி 8 அக் 2021