மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

கர்நாடகாவில் இருந்து வரும் ரசாயன கழிவுநீர்: விவசாயிகள் அதிர்ச்சி

கர்நாடகாவில் இருந்து வரும் ரசாயன கழிவுநீர்: விவசாயிகள் அதிர்ச்சி

கர்நாடகத்தில் தொடர் மழை பெய்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில் கர்நாடக தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் நுரை பொங்க வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 707 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும். தற்போது அணையில் 41.83 அடி நீர் இருப்பு உள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 640 கன அடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீரில் கர்நாடக மாநிலத்தில் ஆற்றங்கரையோரமாக உள்ள தொழிற்சாலைகள் தேக்கிவைத்துள்ள ரசாயன கழிவுகள் தொடர்ந்து ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த ரசாயன கழிவு நுரைகள் ஓசூர் கெலவரப்பள்ளி அணைப்பகுதிகளில் குவியல் குவியலாக நுரை பொங்கி குவிந்து காணப்படுகிறது. இதனிடையே கர்நாடக தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருவதால் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.

மத்திய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணைப்படி, கடந்த ஆண்டும் இந்த நிலை இருந்ததால் தமிழக - கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தென்பெண்ணை ஆற்றில் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

இந்த நிலையில், நீர் தரம் மற்றும் மருத்துவப் பொருட்களின் மாசின் அளவு மழைக்காலத்தில்தான் அதிகம் பாதிக்கப்படுகிறது. மழைக்காலத்துக்கு பின்பு ஆறுகளில் நீர் ஓட்டம் குறைதல் மற்றும் தொடர்ச்சியாக கழிவு வெளியேற்றம் காரணமாக மருந்துகள் உட்பட பல்வேறு வகையான மாசுகள் அதிகரித்துள்ளது என்று ஆற்றில் 22 இடங்களில் தண்ணீர் சேகரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், மருந்து பொருட்கள் சார்ந்த கழிவுகள் அதிகளவில் கலப்பதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 8 அக் 2021