மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இரு பத்திரிகையாளர்கள்!

அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இரு பத்திரிகையாளர்கள்!

2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்புகள் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து வெளியாகி கொண்டிருக்கிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல்,இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று(அக்டோபர் 8) அமைதிக்கான நோபல் பரிசு பெறுவோர்களின் பெயர்களை நார்வே நோபல் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாகக் கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதற்காக பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மரியா ரெசா, ரஷ்யாவைச் சேர்ந்த டிமிட்ரி மொரொட்டா ஆகிய இரு பத்திரிகையாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

மரியா ரெசா, பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகார துஷ்பிரயோகம், வன்முறை மற்றும் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துவதற்கு கருத்து சுதந்திரத்தை பத்திரிகையின் மூலம் பயன்படுத்தியவர். ராப்ளர் என்ற செய்தி தளத்தின் துணை நிறுவனரான இவர், பொய்ச் செய்தியை எதிர்த்து தொடர்ந்து யுத்தம் செய்பவர். இவருடைய How to Stand up to Dictator புத்தகம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகிறது.

டிமிட்ரி மொரொட்டா ரஷ்யாவில் பல ஆண்டுகளாக, பல சவாலான சூழ்நிலைகளிலும் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்காக துணை நின்றவர். 1993 ஆம் ஆண்டில், நோவாஜா கெஜெட்டா என்ற சுதந்திர செய்தித்தாளின் (independent newspaper) நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்தார்.

2020 அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவு திட்ட அமைப்புக்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

வெள்ளி 8 அக் 2021