மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

ரெப்போ வட்டி விகிதத்தில் 8வது முறையாக மாற்றம் இல்லை!

ரெப்போ வட்டி விகிதத்தில் 8வது முறையாக மாற்றம் இல்லை!

தொடர்ந்து எட்டாவது முறையாக ரெப்போ ரேட் எனும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இருமாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நிதிக் கொள்கை குழு கூட்டம் இன்று(அக்டோபர் 8) டெல்லியில் நடைபெற்றது,

கூட்டத்தில் பேசிய ரிசர்வ வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ், தொடர்ந்து எட்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல் 4 சதவீதமாக தொடர்கிறது. ரிசர்வ் ரெப்போ விகிதமும் எந்த மாற்றமும் இல்லாமல் 3.35 சதவீதம் எனும் அளவில் உள்ளது. 2021-22 நிதி ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 9.5 சதவீதம் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான மொத்த ஜிடிபி வளர்ச்சி 17.2 சதவீதமாக இருக்கும். 2022ஆம் நிதியாண்டின் பணவீக்க விகிதம் 5.3 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது என்று கூறியவர்,

வளர்ச்சிக்கு புத்தாக்கம் அளித்து பொருளாதாரம் மீது கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள பாதிப்பை குறைத்து, பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதற்கான முடிவுகளை நிதி கொள்கைக் குழு எடுத்துள்ளது என்றார்.

பெருந்தொற்றின் தொடக்கத்தில் இருந்து வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த ஆளுநர், 2021-22 நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ரூ 2.37 லட்சம் கோடியை திறந்தவெளி சந்தை நடவடிக்கைகளின் மூலம் நிதி அமைப்புக்குள் ரிசர்வ் வங்கி செலுத்தியதாக கூறினார்.

2020-21 மொத்த நிதியாண்டில் இவ்வாறு செலுத்தப்பட்ட ரூ 3.1 கோடியுடன் ஒப்பிடும் போது, 2021-22 நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே ரூ 2.37 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது என்றார்.

மேலும், சிறு மற்றும் அமைப்பு சாரா தொழில்களுக்கு ஆதரவளிப்பதற்காக உடனடி பண பரிவர்த்தனை (ஐஎம்பிஎஸ்) அளவை ரூ 2 லட்சத்தில் இருந்து ரூ 5 லட்சமாக உயர்த்துவது, ரூ 10,000 கோடியை சிறு நிதி வங்கிகளுக்கு வழங்குவது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டவர், இந்தியப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்பட்டு வருகிறது. இது கடந்த ஆர்பிஐ கூட்டத்தை விட சிறந்த நிலையில் உள்ளது. பணவீக்கப் பாதை எதிர்பார்த்ததை விட சாதகமாக உள்ளது. பொருளாதாரத்தில் இயல்புநிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.

வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 8 அக் 2021