மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

தஞ்சையில் கட்டப்பையில் வைத்து கடத்தப்பட்ட பெண் குழந்தை!

தஞ்சையில் கட்டப்பையில் வைத்து கடத்தப்பட்ட பெண் குழந்தை!

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாள்களே ஆன பெண் குழந்தையை கட்டப்பையில் வைத்து கடத்திச் சென்ற பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சை பர்மா காலனியைச் சேர்ந்த குணசேகரன்(24), இவரது மனைவி ராஜலட்சுமி(20). இவர்கள் இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி,கடந்தாண்டு காதல் திருமணம் செய்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜலட்சுமிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை தஞ்சை அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

மருத்துவமனையில், ராஜலட்சுமிக்கு யாரும் உதவிக்கு இல்லாததைக் கண்ட பெண் ஒருவர், ராஜலட்மியிடம், தன்னுடைய நாத்தானருக்கும் இதே மருத்துவமனையில் தான் குழந்தை பிறந்துள்ளது. அதற்காக இங்கே வந்தேன். இங்கே நீங்கள் தனியாக இருப்பதை பார்த்தேன். அதனால், என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள், உன் அம்மா போல் நினைத்துக்கொள், நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறி கடந்த 4 நாட்களாகவே ராஜலட்சுமி, என்ன உதவிகள் கேட்டாலும், அதை அப்பெண் செய்து வந்துள்ளார்.

இதனால், அப்பெண் மீது ராஜலட்சுமிக்கு நம்பிக்கை வந்துள்ளது.

இந்நிலையில், இன்று(அக்டோபர் 8) காலை ராஜலட்சுமியின் கணவர் வெந்நீர் வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார். ராஜலட்சுமி கழிவறைக்கு சென்றுள்ளார். இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அந்த பெண், பெண் குழந்தையை கட்டப்பைக்குள் வைத்து கடத்திச் சென்றுள்ளார்.

திரும்பி வந்த தம்பதி, குழந்தையும், அப்பெண்ணும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அக்கம் பக்கத்தில் தேடியும் எங்கும் அப்பெண்ணை காணாததால், உடனடியாக தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு விரைந்த காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில்,அந்த பெண் கட்டைப்பையில் குழந்தையை கடத்திக் கொண்டு சென்றது தெரிய வந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

உதவி செய்வதுபோல் நடித்து குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 8 அக் 2021