மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

விமானப்படை நாளில் வீரர்களின் சாகசங்கள்!

விமானப்படை நாளில் வீரர்களின் சாகசங்கள்!

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு விமானப் படை வீரர்கள் வானில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தியுள்ளனர்.

பிரிட்டிஷ் ராயல் விமானப் படையின் ஓர் அங்கமாக 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. 1950ஆம் ஆண்டில் இந்திய குடியரசு நாடாக மாறிய பின்னர், ராயல் இந்திய விமானப்படை,இந்திய விமானப் படை என்று மாற்றப்பட்டது. விமானப் படை தோற்றுவிக்கப்பட்ட அக்டோபர் 8ஆம் தேதி ஆண்டுதோறும் விமானப்படை நாளாக இந்திய அரசு கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் 89வது இந்திய விமானப்படை தினம் இன்று(அக்டோபர் 8) கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டு விமானப்படை வீரர்கள் வானில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். சிறப்பு அணிவகுப்பும் நடைபெற்றது. இந்தியாவின் போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ,ரஃபேல் உள்ளிட்ட பலதரப்பட்ட விமானங்கள் பங்கேற்ற சிறப்பு அணிவகுப்பும் நடைபெற்றது. பார்ப்போரின் மனதை கவரும் வகையில் வீரர்களின் சாகச நிகழ்ச்சி இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, கடற்படை தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நாளில் விமானப்படை வீரர்களுக்கு நாட்டின் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், “இந்திய விமான படை என்றால் தைரியம், விடாமுயற்சி மற்றும் தொழில்முறை என்ற பொருள்படும். சவாலான தருணங்களில் மனிதநேய உணர்வுடன் செயல்பட்டு நாட்டை காக்கும் பணியில் தனித்துவமுடன் செயல்பட்ட வீரர்களுக்கு வாழ்த்துகள். இந்த தினத்தில் நம்முடைய விமான படை வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்," விமானப் படையில் பணியாற்றும் வீரர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு விமானப்படை நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பலவிதமான சவால்களில் தேசத்திற்காகப் பணியாற்றும் விமானப்படை வீரர்களை எண்ணிப் பெருமைகொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 8 அக் 2021