மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு மொஹிங்கா!

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு மொஹிங்கா!

தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் குழந்தைகள் விளையாடுவதில்தான், அதிக நேரத்தை செலவழிப்பார்கள். அவர்களின் ஆரோக்கியத்துக்கு உதவும் வாழைத்தண்டை எப்போதும் போல பொரியலாக மட்டுமே செய்துகொடுக்காமல் ஜூஸ், மோரில் கலந்து நீர்மோர், பச்சடி, சூப்பாக செய்துகொடுக்கலாம். அதேபோல் வித்தியாசமான இந்த வாழைத்தண்டு மொஹிங்கா செய்து கொடுத்தும் அசத்தலாம்.

என்ன தேவை?

பிஞ்சு வாழைத்தண்டு (4 இன்ச் துண்டு) - ஒன்று

வறுக்காத வேர்க்கடலை - கால் கப்

பெல்லாரி வெங்காயம் - ஒன்று (நடுத்தர அளவு)

இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

சோயா சாஸ் - 2 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

தண்ணீர் - 500 மில்லி

உப்பு - தேவைக்கேற்ப

பரிமாறுவதற்கு...

வேகவைத்த சேமியா/இடியாப்ப சேவை - 2 கப்

மெலிதாக நறுக்கிய பெல்லாரி வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சை வில்லைகள் - 2

கடலைப்பருப்பு தட்டை - 3 (விருப்பப்பட்டால்)

எப்படிச் செய்வது?

வாழைத்தண்டை மெல்லிய வட்டங்களாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை இஞ்சி - பூண்டு விழுதுடன் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து, வேர்க்கடலையை மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கி, வெங்காயக் கலவையைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் வாழைத்தண்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, வாழைத்தண்டு, வேர்க்கடலை வேகும் வரையில் கொதிக்கவிடவும். வெந்தவுடன், அரிசி மாவு, சோயா சாஸ் சேர்த்து, சிறிது கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். கொத்தமல்லித்தழை தூவி, பரிமாற வேண்டியவற்றுடன் பரிமாறவும். பர்மாவின் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு இந்த மொஹிங்கா.

நேற்றைய ரெசிப்பி வாழைத்தண்டு ஹனி சில்லி ஃப்ரை

.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 8 அக் 2021