மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

ரிலாக்ஸ் டைம்: கலகலா!

ரிலாக்ஸ் டைம்: கலகலா!

சும்மா இருக்கும் சில நேரங்களில் சிலர் மிக்சர், சிப்ஸ், பிட்சா, பர்கர் என ஏதேனும் கொறித்தபடியே இருப்பார்கள். இப்படி அனைவரின் வயிற்றையும் நிரப்பித் தள்ளும் 'ஸ்நாக்ஸ்’ என்று சொல்லப்படும் நொறுக்குத் தீனியை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது அனைவரின் நலனுக்கும் ஆரோக்கியமானதாக அமையும். அதற்கு எளிமையாகச் செய்யக்கூடிய இந்த கலகலா உதவும்.

எப்படிச் செய்வது?

இரண்டு கப் மைதா மாவில் அரை கப் பொடித்த சர்க்கரை, அரை டீஸ்பூன் ஏலக்காய்த்தூள், இரண்டு டேபிள்ஸ்பூன் நெய், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு ஒரு கப் பால் சேர்த்து மிருதுவான மாவாகப் பிசையவும். விருப்பப்பட்டால அரை டீஸ்பூன் எள் சேர்க்கலாம். பிசைந்த மாவை 15 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். பிறகு சப்பாத்திக்குத் தேய்ப்பதுபோல தேய்த்து, சதுரங்களாகவோ, டயமண்டு வடிவிலோ வெட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

சிறப்பு

வீட்டிலேயே செய்யப்படும் இந்த கலகலா அனைவருக்கும் ஏற்றதாக அமையும்.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 7 அக் 2021