மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து: ஏஐசிடிஇ எச்சரிக்கை!

கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து: ஏஐசிடிஇ எச்சரிக்கை!

7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனப் பொறியியல் கல்லூரிகளுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது போன்று, பொறியியல் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் அனைத்து கல்வி செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில், 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற மாணவர்கள் கல்லூரிகளுக்குச் செல்லும்போது அவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் எந்தெந்த மாணவர்கள் சேர்கின்றனர் என்ற விவரத்தை அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்றும், அவர்களிடம் இருந்து எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

எச்சரிக்கைக்குப் பிறகும், மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரி நிர்வாகத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில், “பொறியியல் கல்லூரிகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் பல கல்லூரிகள் தொடர்ந்து கட்டணம் வசூலித்தால், ஏஐசிடிஇ மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அளித்த அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஏற்கனவே ஏதேனும் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்தால் மாணவர்களுக்கு அதைத் திரும்ப செலுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 7 அக் 2021