மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு ஹனி சில்லி ஃப்ரை!

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு ஹனி சில்லி ஃப்ரை!

வாழை மரத்தை வெட்டினாலும், கடைசியில் எஞ்சி இருக்கும் வாழைத்தண்டில் ஏராளமான நன்மைகள் உண்டு. வாழைத்தண்டில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம். அதிகமாக உதிரப்போக்கு ஏற்படும் பெண்கள் வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது அந்த பிரச்சினையிலிருந்து விடுபட வழிவகுக்கும். அதற்கு இந்த வாழைத்தண்டு ஹனி சில்லி ஃப்ரை உதவும்.

என்ன தேவை?

பிஞ்சு வாழைத்தண்டு - ஒன்று (12 இன்ச் நீளமுடையது)

மைதா - அரை கப்

அரிசி மாவு, கார்ன் ஃப்ளார் - தலா 2 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

தேன் - கால் கப்

டொமேட்டோ கெச்சப் - 3 டேபிள்ஸ்பூன்

சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் அல்லது மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

ஸ்ப்ரிங் ஆனியன் - ஒன்று (பச்சைப் பகுதி மட்டும்)

உப்பு - தேவைக்கேற்ப,

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாழைத்தண்டை மெல்லிய வட்டங்களாக நறுக்கிக்கொள்ளவும். நிறம் மாறும் முன்னரே அதில் மாவு வகைகள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசிறிவைக்கவும். எண்ணெயைக் காயவைத்து, மிதமான தீயில் வாழைத்தண்டுகளை மொறுமொறுப்பாக ஆகும் வரை பொரித்தெடுத்து வைக்கவும். பொரித்தவுடன் வாழைத்தண்டு பாதியாக சுருங்கிவிடும். ஒரு கடாயில் தேன், டொமேட்டோ கெச்சப், சோயா சாஸ், சில்லி ஃப்ளேக்ஸ் / மிளகாய்த்தூள் கலந்து லேசாக சூடு செய்து அதில் பொரித்து வைத்துள்ள வாழைத்தண்டுகளைப் போட்டுப் புரட்டி, ஸ்ப்ரிங் ஆனியனைப் பொடியாக நறுக்கி தூவிப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி - வாழைத்தண்டு மோர்க்கூட்டு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 7 அக் 2021