மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

சுற்றுலா பயணங்களைத் தவிர்ப்பது நல்லது: ஐசிஎம்ஆர்

சுற்றுலா பயணங்களைத் தவிர்ப்பது நல்லது: ஐசிஎம்ஆர்

தற்போதைய சூழ்நிலையில் சுற்றுலா செல்வது மூன்றாவது அலைக்கு வழிவகுக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா இரண்டாம் அலை தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. அதனால், அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலா தலங்களுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அங்கே கூடும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள்ளே முடங்கியிருந்த மக்கள் தற்போது வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இரண்டு ஆண்டுகளில் எங்கே எல்லாம் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்த பயணங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றிக் கொள்வதைதான் ’ரிவெஞ்ச் டிராவல்’ என்று ஐசிஎம்ஆர் வரையறை செய்கிறது. இதன்மூலம் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், ஐசிஎம்ஆர், ஜர்னல் ஆஃப் டிராவல் மெடிசன் என்ற பெயரில் ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, மேற்குவங்கத்தில் உள்ள டார்ஜிலிங் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

இதுபோன்ற சுற்றுலா தலங்களில் தளர்வுகள் கொண்டு வரப்பட்ட பின் மக்களின் வரத்தும் அதிகரித்தது; கொரோனா தொற்றும் அதிகரித்தது. இதை அடிப்படையாக வைத்தே இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுலா தலங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதன் மூலம் ,இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு 47 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

அதுமட்டுமில்லாமல், மூன்றாவது அலை கணிக்கப்பட்டதை விட இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே ஏற்படும். அதனால் சுற்றுலா பயணங்களை தற்போதைய சூழ்நிலையில் தவிர்ப்பது நல்லது. இந்திய மக்கள்தொகையில் இதுவரை 20 சதவிகித மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

புதன் 6 அக் 2021