மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

சென்னை மெட்ரோவில் இன்று இலவச மருத்துவ முகாம்!

சென்னை மெட்ரோவில் இன்று இலவச மருத்துவ முகாம்!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச பொது சுகாதார மருத்துவ முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று (அக்டோபர் 6) உயர் நீதிமன்றம் மெட்ரோ, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வரும் 8ஆம் தேதி புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ, வடபழனி மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் இலவச மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 4ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் திருவொற்றியூர் மெட்ரோ மற்றும் விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் என காலையில் 132 பேர், மாலையில் 146 பேர் என மொத்தம் 278 பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 6 அக் 2021