மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

வேதியியலுக்கான நோபல் பரிசு பெறும் இருவர்!

வேதியியலுக்கான நோபல் பரிசு பெறும் இருவர்!

2021ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியலைத் தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு பெறுவோர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு 2021ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் பொதுச் செயலாளர் கோரன் ஹான்சன் இன்று(அக்டோபர் 6) அறிவித்துள்ளார்.

வேதியியல் மூலக்கூறு கட்டுமானத்திற்கான புதிய மற்றும் தனித்துவமான வினையூக்கி (asymmetric organocatalysis ) கருவியை உருவாக்கியதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நோபல் குழு கூறுகையில், "மூலக்கூறுகளை உருவாக்குவது என்பது கடினமான கலை. பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மில்லன் ஆகியோர் மூலக்கூறு கட்டமைப்பிற்கு சரியான புதிய கருவியை உருவாக்கியுள்ளார்கள். இது மருத்துவ ஆராய்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, வேதியியலின் வளர்ச்சிக்கு உதவும். இவர்களின் இந்தக் கண்டுபிடிப்பு புதிய மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு உதவிகரமாக அமையும்" என்று கூறியுள்ளது.

2020ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸைச் சேர்ந்த இமானுவேல் ஷார்பான்தியே மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் ஏ.டோட்னா ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1901ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை மொத்தம் 187 பேர் வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர். இந்தப் பரிசு பெற்றவர்களில் ஏழு பேர் மட்டுமே பெண்கள். பிரிட்டிஷைச் சேர்ந்த பிரடெரிக் சாங்கர் என்பவர் மட்டும் 1958, 1980 ஆகிய இரண்டு வருடங்களில் நோபல் பரிசு பெற்றுள்ளார்.

அதிக வேதியியல் பரிசு பெற்ற நாடுகளின் வரிசையில் அமெரிக்கா( 72) முதலிடத்திலும், ஜெர்மனி(34) மற்றும் இங்கிலாந்து(34) ஆகியவை இரண்டாவது இடத்திலும் உள்ளன.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 6 அக் 2021