மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

உயிரை விலை வைத்து பண்டிகையை கொண்டாட முடியாது: உச்ச நீதிமன்றம்!

உயிரை விலை வைத்து பண்டிகையை கொண்டாட முடியாது: உச்ச நீதிமன்றம்!

பட்டாசு கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில், வருகிற தீபாவளி கொண்டாடப்படும் நவம்பர் 4ஆம் தேதியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டாசு தயாரிப்பாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் கடந்த வார விசாரணையின்போது, தடை செய்யப்பட்ட பெரிய பட்டாசுகள் அரசியல் கட்சி விழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வெடிக்கப்படுவதை பார்க்கிறோம். உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை எதற்காக தயாரிக்கிறீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் இந்த மனு இன்று(அக்டோபர் 6) உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றியே பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. சிலர் செய்யக்கூடிய தவறுக்கு ஒட்டுமொத்த துறையையும் தண்டிப்பது சரியாகாது என்று தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், நாட்டின் முன்னணி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களே தடை செய்யப்பட்ட பட்டாசுகளை தயாரிக்கிறார்கள். தடை செய்யப்பட்ட பேரியம் உப்பை பட்டாசு தொழிற்சாலை கிடங்குகளில் ஏன் வைத்திருக்க வேண்டும் ?.பேரியம் நைட்ரேட் ரசாயனத்தை சேமித்து வைப்பதை கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பட்டாசு தொழிலை நம்பி குடும்பங்கள் இருப்பது சரிதான். ஆனால், சுற்றுச்சூழல் மாசினால் பாதிக்கப்படும் நாட்டின் நிலைமை என்ன ” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், பண்டிகை கொண்டாட்டங்களை உச்ச நீதிமன்றம் வெறுக்கவில்லை. ஆனால் மற்றவர்களின் உயிரை விலை வைத்து பண்டிகையை நாம் கொண்டாட முடியாது என்று கூறிய நீதிபதிகள்,

பச்சை பட்டாசுகள் என்ற போர்வையில், பட்டாசு உற்பத்தியாளர்களால் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. எங்கள் முந்தைய உத்தரவை ஒவ்வொரு மாநிலமும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கூட்டு பட்டாசுகளுக்கு தடை இருந்தாலும், மாநிலம் அல்லது நகரத்தில் நடக்கும் எந்த கொண்டாட்டத்திற்கும் சென்றால், கூட்டு பட்டாசுகள் சந்தையில் வெளிப்படையாகக் கிடைப்பதை பார்க்க முடிகிறது. முற்றிலும் தடை செய்ய வேண்டும்” என்று கூறினர்.

இருதரப்பும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

-வினிதா

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

புதன் 6 அக் 2021