மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

ரிலாக்ஸ் டைம்: கீரை ராகி ஆம்லெட்!

ரிலாக்ஸ் டைம்: கீரை ராகி ஆம்லெட்!

காலை உணவைத் தவறவிட்டவர்கள் 10 - 11 மணி அளவில் ஆரோக்கியம் நிறைந்த உணவை சாப்பிடுவது அவசியம். அதற்கு இந்த கீரை ராகி ஆம்லெட் சிறந்த தேர்வாக இருக்கும். நாள் முழுக்க புத்துணர்ச்சி தரும்.

எப்படிச் செய்வது?

அரை கட்டு கீரை, ஒரு பெரிய வெங்காயம், சிறிய துண்டு இஞ்சி, இரண்டு பச்சை மிளகாயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கப் கடலை மாவு, கால் கப் ராகி (கேழ்வரகு) மாவு, கால் டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். நறுக்கியவற்றை மாவில் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு ஆம்லெட்டாக ஊற்றி சிறு தீயில் வேகவிட்டு திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

சிறப்பு

தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இரும்புச்சத்து அதிகமாக கேழ்வரகுடன் சேர்த்து செய்யப்படும் இந்த ஆம்லெட் கவலை, மன அழுத்தம், தூக்கமின்மையை போக்க உதவும்.

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

புதன் 6 அக் 2021