மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு மோர்க்கூட்டு

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு மோர்க்கூட்டு

நார்ச்சத்து நிறைந்த வாழைத்தண்டு, சிறுநீரகத்தின் செயல்திறனை அதிகரிக்கும். பருமன் உடையவர்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அதற்கு இந்த வாழைத்தண்டு மோர்க்கூட்டு உதவும்.

என்ன தேவை?

பிஞ்சு வாழைத்தண்டு (4 இன்ச் துண்டு) - ஒன்று

தயிர் - ஒரு கப்

கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

சீரகம் - ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

வாழைத்தண்டைப் பொடியாக நறுக்கி தனியே வேகவைக்கவும். கடலைப்பருப்புடன் சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். பின்னர் அதை தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வாழைத்தண்டு, அரைத்த விழுது, உப்பு சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரையில் கொதிக்கவிடவும். அடுப்பிலிருந்து இறக்கி, சற்று ஆறியவுடன் தயிர் கலந்து பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: வாழைப்பழ அப்பம்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 6 அக் 2021