மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

வாகனங்களின் ஹாரன்களாக மாறும் இசைக் கருவிகளின் ஒலி!

வாகனங்களின் ஹாரன்களாக மாறும் இசைக் கருவிகளின் ஒலி!

இந்திய இசைக் கருவிகளின் ஒலியை வாகனங்களுக்கு ஹாரன்களாகப் பயன்படுத்தும் வகையில் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்திய நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஒலி மாசுபாடு முக்கிய கவலையாக உள்ளது. குறிப்பாக, சாலைகளில் செல்லும் வாகனங்களிலிருந்து வெளிப்படும் சத்தங்கள்தான் அதிகம். இதனால், மனிதர்களும், விலங்குகளும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு மாற்று வழி ஒன்றை கூறியுள்ளார் ஒன்றிய அமைச்சர்.

நேற்று (அக்டோபர் 4) நாசிக்கில் நடைபெற்ற நெடுஞ்சாலை திறப்பு விழாவில் பேசிய ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “இப்போது இந்த சைரன் ஒலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினரின் வாகனங்களில் இருக்கும் சைரன்களுக்குப் பதிலாக இசைக் கருவிகளின் ஒலிகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

அனைத்து இந்திய வானொலியில் அதிகாலையில் இசைக்கப்படும் ஒலியை ஆம்புலன்சுகளுக்கு பயன்படுத்த நினைக்கிறேன். அதனால் மக்கள் மகிழ்ச்சியாக உணர்வார்கள். சைரன் சத்தம் மிகவும் எரிச்சலூட்டுவதாக மட்டுமில்லாமல், காதுகளையும் பாதிக்கிறது.”

காதுகளுக்கு மிகவும் இன்பம் தரும் ஒலிகளை எப்படி வாகனங்களின் ஹாரன்களாக கொண்டு வர வேண்டும் என்பதை அடிக்கோடிட்டு பேசிய அமைச்சர்,

“புல்லாங்குழல், தபலா, வயலின், மவுத் ஆர்கான், ஹார்மோனியம் உள்ளிட்ட இசைக்கருவிகளின் இனிமையான ஒலியை அனைத்து வாகனங்களிலும் ஹாரன்களாகப் பயன்படுத்தும் வகையில், விரைவில் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

-வினிதா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

செவ்வாய் 5 அக் 2021