மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

குறை தீர்ப்பு கூட்டத்தில் சமையல் வீடியோ பார்த்த அதிகாரி!

குறை தீர்ப்பு கூட்டத்தில் சமையல் வீடியோ பார்த்த அதிகாரி!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் பெண் அதிகாரி ஒருவர் சமையல் வீடியோ பார்த்துக்கொண்டிருந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் பல மாதங்களாக நடத்தப்படாமல் இருந்த குறை தீர்ப்பு கூட்டத்தை மீண்டும் நடத்த அரசு அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து நேற்று அனைத்து மாவட்டங்களிலும் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்றுக் கொண்டு, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நேற்று (அக்டோபர் 4) குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது, பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி கொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அலுவலர்கள் சிலர் அலட்சியமாக, தங்களது செல்போன்களில் சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். அதில், ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி சுமதி என்பவர், தனது செல்போனில் யூடியூப்பில் சமையல் செய்யும் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். இதை கவனித்த ஒருவர், அதிகாரியின் பொறுப்பின்மையை வெளி உலகுக்குக் காட்டுவதற்காக வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவைப் பார்க்கின்ற அனைவரும், அந்தப் பெண் அதிகாரியை திட்டி தீர்க்கின்றனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

செவ்வாய் 5 அக் 2021