மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

உள்ளாட்சித் தேர்தல்: சென்னையில் இருந்து ஒன்பது மாவட்டங்களுக்குச் சிறப்பு பேருந்துகள்!

உள்ளாட்சித் தேர்தல்: சென்னையில் இருந்து ஒன்பது மாவட்டங்களுக்குச் சிறப்பு பேருந்துகள்!

மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களுக்குக் கூடுதல் பேருந்துகளை இயக்க, போக்குவரத்து கழகங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையொட்டி 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு வருகிற 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

தேர்தல் நடைபெறும் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சென்னையில் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்களும் தேர்தலின்போது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு வசதியாக மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க முன்வந்துள்ளது.

இதையொட்டி இன்றும் (அக்டோபர் 5), வெள்ளிக்கிழமை (அக்டோபர் 8) ஒன்பது மாவட்டங்களுக்கு தேவையான கூடுதல் பேருந்துகளை விட போக்குவரத்து கழகங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நீண்ட தூரம் செல்பவர்கள் முன்பதிவு செய்தும் பயணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

செவ்வாய் 5 அக் 2021