மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

தடுப்பூசி போட விவசாயி வைத்த நிபந்தனை : வைரல் வீடியோ!

தடுப்பூசி போட விவசாயி வைத்த நிபந்தனை :  வைரல் வீடியோ!

தடுப்பூசி போட வேண்டுமென்றால், ஒருநாள் என் மாட்டை மேய்க்க வேண்டும் என்று விவசாயி ஒருவர் அரசு மருத்துவருக்கு நிபந்தனை விதித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், இன்னும் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முரண்டு பிடிக்கத்தான் செய்கிறார்கள். அதனால், தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுபொருட்கள், தடுப்பூசி போட்டவர்களுக்குதான் மதுபானம், ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட முடியும், சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசு மருத்துவர், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு ஒருவரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

29 விநாடிகள் மட்டுமே ஓடும் வீடியோவில்,”அரசு மருத்துவர், மாடு மேய்க்க செல்பவரிடம் தடுப்பூசி போட்டுக்கோங்க என்று சொல்கிறார். அதற்கு அவர், இல்லங்க தடுப்பூசி போட்டுக்கிட்டா கை,கால் வலிக்குதாம், மயக்கம், காய்ச்சல் வருதாம். அப்படி வந்தா, நான் எப்படி மாடுகளை மேய்க்க முடியும்?என்று கேள்வி கேட்கிறார். அப்படி எதுவும் வராது என்று மருத்துவர் கூறுகிறார். அப்போ, என் மாட்டை ஒருநாள் மேய்ப்பீங்களா என்று அவர் கேட்கிறார். அப்போது மருத்துவர் மாடு மேய்க்கணும் அவ்வளவு தானே. நாளைக்கு நான் பார்த்துக்குறேன். நீங்க இன்னிக்கு ஊசி போட்டுகோங்க எனக் கூறுகிறார். நல்லா மேய்ப்பீங்களா என்று மறுபடியும் கேள்வி கேட்கிறார்.

அப்போது, மருத்துவரின் அருகில் இருக்கும் சுகாதாரப் பணியாளர். ஏப்பா, உன் மனைவிக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்றினாரு நம்ம டாக்டர் என்று சொல்கிறார். ஆனால், அந்த நபரோ எதற்கும் செவி சாய்ப்பது மாதிரி தெரியவில்லை. அப்படியே அந்த இடத்திலிருந்து நகர்கிறார்” அதனுடன் அந்த வீடியோ முடிகிறது.

இந்த வீடியோவை ட்விட்டர் தளத்தில் யாழினி என்ற மருத்துவர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

-வினிதா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

செவ்வாய் 5 அக் 2021