மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி 90% நிறைவு: மாநகராட்சி ஆணையர்!

மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி 90% நிறைவு: மாநகராட்சி ஆணையர்!

சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி 90 சதவிகிதம் முடிந்துவிட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் விடாமல் மழை பெய்து வருகிறது. நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது.

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்,சாலைகளில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை தியாகராய நகர் ஜி.என். செட்டி சாலையில் 106 கோடி ரூபாயில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி இன்று(அக்டோபர் 5) ஆய்வு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னையிலுள்ள 15 மண்டலங்களை கண்காணிக்க,15 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்கள் தூர்வாருதல் மற்றும் நீர் நிலைகளில் மிதக்கும் தாவரங்களை அகற்றி, தூர்வாரும் பணிகளை பருவமழை காலத்திற்கு முன்னதாகவே விரைந்து முடிக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த இடங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி 90 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான 880 பம்புகள், ஜே.சி.பி. உள்ளிட்ட கனரக வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது” என்று கூறினார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

செவ்வாய் 5 அக் 2021