மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூவர்!

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூவர்!

2021ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்புகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் நாளான இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்கியூரோ மனாபே, ஜெர்மனியைச் சேர்ந்த கிளாஸ் ஹாசில்மன், இத்தாலியைச் சேர்ந்த ஜியார்ஜியோ பாரிசி ஆகிய மூன்று பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மூத்த வானிலை ஆய்வாளரான ஸ்கியூரோ மனாபே, வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிக்கும்போது, பூமியின் மேற்பரப்பில் வெப்பநிலை எவ்வாறு அதிகரிக்கிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். 1960களில் பூமியின் பருவநிலை குறித்த மாதிரிகளை இவர் உருவாக்கினார்.

ஜெர்மனியில் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் மெட்ராலஜியின் பேராசிரியரான கிளாஸ் ஹாசல்மேன், வானிலை மற்றும் காலநிலையை இணைக்கும் ஒரு மாதிரியை உருவாக்கியுள்ளார். இயற்கையாகவும், மனித நடவடிக்கைகளாலும் பருவநிலையில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பதையும் விளக்கியுள்ளார்.

ரோம் சபியன்சா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜார்ஜியோ பாரிசிக்கு, ஒழுங்கற்ற சிக்கலான பொருட்களில் மறைக்கப்பட்ட வடிவங்களைக் கண்டறிந்துள்ளார். அவை இயற்பியலில் மட்டுமல்ல, கணிதம், உயிரியல், நரம்பியலில் உள்ள சீரற்ற சிக்கலான பொருட்கள் மற்றும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளப் பயன்படுகின்றன. மேற்கண்ட ஆய்வுகளுக்காக மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சையின்சஸ், ஸ்டாக்ஹோம் ஸ்வீடன் ஆகியவற்றால் வழங்கப்படுகிறது. இந்த துறையில் இதுவரை 216 பேர் தங்கள் பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேர் மட்டுமே பெண்கள்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் இயற்பியல் நோபல் பரிசு அமெரிக்காவின் ஆண்ட்ரியா கெஸ், ரோஜர் பென்ரோஸ், ஜெர்மனியின் ரீன்ஹாட் நெஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

செவ்வாய் 5 அக் 2021