மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

அடுத்து 30,000 மையங்களில் தடுப்பூசி: மா.சு

அடுத்து 30,000 மையங்களில் தடுப்பூசி: மா.சு

தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறவுள்ள ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாமில் 30 ஆயிரம் மையங்கள் அமைக்கப்படவுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வாரந்தோறும் மெகா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை நான்கு மெகா தடுப்பூசி மையங்கள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து முகாம்களிலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாகவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதாலும், அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கை அடையும் நோக்கிலும், அரசு தொடர்ந்து தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இதுவரை தடுப்பூசி முகாம்களில் 20 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டு வந்தன. அடுத்த தடுப்பூசி முகாமில் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று(அக்டோபர் 5) செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பருவமழை பெய்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் தலைகாட்ட தொடங்கியுள்ளது.அதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வருகிற 10ஆம் தேதி நடைபெறவுள்ள ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாமில் வழக்கத்தை விட கூடுதலாக 10 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதாவது, ஒரே நாளில் 30 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. மக்கள் தவறாமல் கலந்து கொண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

தமிழகம் முழுவதும் இதுவரை 4.79 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

செவ்வாய் 5 அக் 2021