மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

ரிலாக்ஸ் டைம்: பனீர் தக்காளி சூப்!

ரிலாக்ஸ் டைம்: பனீர் தக்காளி சூப்!

நாவின் சுவை மொட்டுகளை சுவை அறியத் தயார்படுத்துவதுடன் பசி உணர்வைத் தூண்டவும் செய்யும் சூப் வகைகள். ரிலாக்ஸ் டைமில் காபி, டீக்கு பதிலாக இந்த பனீர் தக்காளி சூப் சாப்பிட்டு நாள் முழுக்க புத்துணர்ச்சி பெறலாம்.

எப்படிச் செய்வது?

வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, சிறு துண்டுகளாக்கிய கால் கப் பனீரைப் பொரித்துத் தனியே வைக்கவும். ஒரு கப் வெந்நீரில் மூன்று தக்காளியைப் போட்டு 10 நிமிடங்கள் கழித்து எடுத்து, தோலை உரித்து மிக்ஸியில் அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவைக் கரைத்து தேவையான அளவு உப்பு, தக்காளி அரைத்த விழுதினையும் சேர்த்துக் கலக்கி அடுப்பிலேற்றி, ஒரு கொதிவிடவும். கொதித்ததும் இரண்டு டீஸ்பூன் மிளகுத்தூள் தூவி இறக்கி நறுக்கிய ஒரு டேபிள்ஸ்பூன் மல்லித்தழையைக் கலந்துவிடவும். பரிமாறும் முன் பொரித்த பனீர் துண்டுகளைச் சேர்க்க வேண்டும்.

சிறப்பு

புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள இந்த சூப் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பாதிக்காது என்பதால், நீரிழிவாளர்களும் எடுத்துக்கொள்ளலாம். செரிமானத்துக்கு நல்லது.

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

செவ்வாய் 5 அக் 2021