மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பழ அப்பம்

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பழ அப்பம்

ஆற்றலை உடனடியாக அதிகரிக்கச் சிறந்தது வாழைப்பழம். அதில் உள்ள கார்போஹைட்ரேட், பொட்டாசியம், வைட்டமின் பி6 இவை அனைத்தும் உடலில் ஆற்றலின் அளவை அதிகரிக்கும். உடனடியாக ஆற்றலைப் பெற விரும்புபவர்களுக்கு இந்த வாழைப்பழ அப்பம் பெஸ்ட் சாய்ஸ்.

என்ன தேவை?

கோதுமை மாவு - ஒரு கப்

துருவிய வெல்லம் - ஒரு கப்

தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்

உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்

வாழைப்பழம் - 2

சமையல் சோடா - 2 சிட்டிகை

எண்ணெய் / நெய் - பொரிக்கத் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வெல்லத்தைச் சிறிதளவு வெந்நீரில் கரைத்து வடிகட்டவும். வாழைப்பழத்தை மசிக்கவும். எண்ணெய் நீங்கலாக மற்ற பொருள்களை ஒன்றாகக் கலந்துவைக்கவும். குழிப்பணியாரக்கல் ஒன்றை எண்ணெய்/நெய் ஊற்றி காயவைத்து மாவை சிறு சிறு அப்பங்களாகச் சுட்டெடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: வாழைப்பழ கேசரி

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

செவ்வாய் 5 அக் 2021