மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

தீபாவளி: அரசு விரைவு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு!

தீபாவளி: அரசு விரைவு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு விரைவு பஸ்களில் இன்று (அக்டோபர் 4) முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நவம்பர் 4ஆம் தேதி (வியாழக்கிழமை) வருகிறது. அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்தால் சனி, ஞாயிறு எனத் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும். இதனால் சென்னையில் வசிக்கும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் முன்கூட்டியே சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிடுவது உண்டு. இதற்காக பலர் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். சிலர் சிறப்பு ரெயில்கள் அறிவிப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு விரைவு பஸ்களில் இன்று (அக்டோபர் 4) முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், கும்பகோணம், நாகப்பட்டினம், திருப்பூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சொகுசு பஸ்களும் படுக்கை வசதி கொண்ட பஸ்களும், குளிர்சாதன பஸ்களும் இயக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக பேசியுள்ள அரசு போக்குவரத்துக்கழக உயரதிகாரி, “தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 4ஆம் தேதி வருவதையொட்டி வெளியூர் செல்ல விரும்பும் பயணிகள் அக்டோபர் 4 (இன்று) முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு நான்காயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

அதேபோல் இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன. இந்த மாதம் 29ஆம் தேதியில் இருந்து சிறப்பு பஸ்கள் விடலாமா என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. வழக்கமாக தென்மாவட்டங்களுக்கு அதிகமாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது உண்டு. அதேபோல் இந்த ஆண்டும் பயணிகளின் கூட்டத்தைப் பொறுத்து பஸ்கள் இயக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

ஆனால், ஓராண்டுக்கு மேலாக பல மாதங்களுக்குப் பிறகு நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் சென்னை போன்ற பெருநகரங்களிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

திங்கள் 4 அக் 2021