மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

திரையரங்குகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள உத்தரவு!

திரையரங்குகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள உத்தரவு!

தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து அடிக்கடி ஆய்வுசெய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பூரை சார்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். அதில்,” பெரம்பூரில், எஸ்டூ ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள திரையரங்கில், வாட்டர் பாட்டில்கள், குளிர்பானங்கள், உணவுப்பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது சட்டப்படி தவறானது. இதன்மூலம் பல லட்ச ரூபாய் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்படுகிறது. இது தொடர்பாக முறையான விசாரணை செய்து, உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று(அக்டோபர் 4) நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திரையரங்குகளில் உணவு பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பான புகார் குறித்து சோதனை செய்வதாகவும், அதில் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2021 ஜூலை மாதம் வரை, 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளனவா என சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அவ்வப்போது சென்று ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, உணவுப் பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

திங்கள் 4 அக் 2021