மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெறும் இருவர்!

மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெறும் இருவர்!

2021ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கா விஞ்ஞானிகளான டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் மிகச்சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நோபல் பரிசு சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசாகும். இதில் அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலுள்ள குழுவாலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலுள்ள கரோலின்ஸ்கா நிறுவன குழுவாலும் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், 2021 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு, இன்று(அக்டோபர் 4) ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் வெளியாக தொடங்கியது. 11ஆம் தேதிவரை நோபல் பரிசுகள் அறிவிக்கப்படுகிறது.

முதல் நாளான இன்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ், ஆர்டம் படபூட்டியன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உடலை தொடாமலேயே வெப்பம், வலி, உடல் அழுத்தம் மற்றும் இதர விவரங்களை கண்டறியும் சென்சார் கருவியை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு, மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 4 அக் 2021