மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

தனியார் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை!

தனியார் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை!

7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களிடம் எந்த வகையான கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா உத்தரவிட்டுள்ளார்.

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த இடஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணம், விடுதி கட்டணம் என அனைத்தையும் அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பொறியியல் படிப்பில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 11 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டன. 5,972 மாணவர்கள் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இதில், 82 சதவிகித மாணவர்கள் தனியார் கல்லூரிகளையே தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில் தனியார் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்று கல்லூரி நிர்வாகங்கள் வற்புறுத்துவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா இன்று(அக்டோபர் 4) அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில்,,”இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரக் கூடிய மாணவர்களிடம் கல்வி மற்றும் விடுதி கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறும் கல்லூரிகள் மீது தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

-வினிதா

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

திங்கள் 4 அக் 2021