மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

ரிலாக்ஸ் டைம்: வாழைத்தண்டு மசாலா லஸ்ஸி!

ரிலாக்ஸ் டைம்: வாழைத்தண்டு மசாலா லஸ்ஸி!

‘வாழைத்தண்டு மாதிரி... எப்படி ஸ்லிம்மா இருக்கா பாரு’ என்று சில பெண்களைப் பார்த்து வியந்து சொல்வதுண்டு. அதிகப்படியான சதையைக் குறைத்து, உடலை ‘சிக்’கென மாற்றும் வாழைத்தண்டில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம் என்பதால் பருமனைக் குறைக்க நினைப்பவர்கள் ரிலாக்ஸ் டைமில் இந்த வாழைத்தண்டு மசாலா லஸ்ஸி செய்து அருந்தலாம்.

எப்படிச் செய்வது?

ஆறு இன்ச் நீளம் கொண்ட வாழைத்தண்டை நறுக்கி, தண்ணீர் சேர்த்து அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். இதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, ஒரு கப் கெட்டித் தயிர் கலந்து நன்றாகக் கடையவும். சீரகம் இரண்டு டேபிள்ஸ்பூன், மிளகு, சோம்பு தலா ஒரு டீஸ்பூன், பட்டை சிறிய துண்டு, கிராம்பு இரண்டு ஆகியவற்றை லேசாக வாசனை வரும் வரையில் வறுத்து ஆறவைத்து நைஸாக அரைக்கவும். தேவையான அளவு உப்பு, வறுத்து அரைத்த மசாலாவை லஸ்ஸியுடன் கலக்கவும். ஜில்லென்றுப் பரிமாறவும்.

குறிப்பு

லஸ்ஸி மசாலாவில் விரும்பினால் காய்ந்த புதினா இலைகள் அரை கைப்பிடி சேர்த்து அரைக்கலாம். இந்த மசாலாவை நீர்மோர், மோர்க்குழம்பு, மோர்க்கூட்டு என்று எதில் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.

சிறப்பு

வாழைத்தண்டில் அதிகப்படியான தாது உப்புக்கள் மற்றும் புரதச் சத்து உள்ளது. குழந்தைகளுக்கு வாழைத்தண்டில் விதவிதமான உணவுகளைச் செய்துகொடுக்க, அவர்களது ஆரோக்கியம் மேம்படும்.

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 4 அக் 2021