மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

பிஎஸ்டி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை!

பிஎஸ்டி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை!

புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பு கட்டிடத்தின் தரம் குறித்த இறுதி அறிக்கையை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குனர் கோவிந்திராவிடம் ஐஐடி நிபுணர் குழுவினர் தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் சென்னை புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இரண்டு கட்டங்களாக கட்டப்பட்டன. முதற்கட்டமாக 764 வீடுகளும் இரண்டாவது கட்டமாக 1,056 வீடுகளும் என மொத்தம் 1,820 வீடுகள் கட்டப்பட்டன. இதையடுத்து கூவம், அடையாறு மற்றும் பக்கிங் கால்வாய் அருகே குடிசைகளில் வசிப்பவர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியேறினர்.

அங்கு குடியேறிய இரண்டு,மூன்று மாதங்களே ஆன நிலையில், கட்டடத்தில் பல இடங்களில் தொட்டாலே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுகின்றன என்று அங்கு குடியிருக்கும் மக்கள் புகார் தெரிவித்தனர்.

புகாரைத் தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள், முறைகேடு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதுதொடர்பாக நடந்து முடிந்த சட்டப்பேரவையில் சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதையடுத்து, குடியிருப்பு கட்டிடத்தின் தரத்தை ஆய்வு மேற்கொள்ள ஐஐடி சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

தொடர்ந்து கட்டிட பணியை சரிவர செய்யாத குடியிருப்பிற்கான குடிசை மாற்று வாரியத்தின் உதவிப் பொறியாளர் பாண்டியன் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகிய இரண்டு அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சென்னை ஐஐடியுடன் தொடர்புடைய CUBE (Centre for Urbanisation, Building and Environment) என்ற நிறுவனத்திலிருந்து 10க்கும் மேற்பட்ட நிபுணர்கள் கேபி பார்க் குடியிருப்பின் கட்டிட மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய தொடங்கினர்.

செப்டம்பர்15 அன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் முதற்கட்டமாக 441 பக்க ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கட்டிடத்தின் இறுதி அறிக்கையை ஐஐடி நிபுணர் குழுவினர் இன்று(அக்டோபர் 4) நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குனர் கோவிந்திராவிடம் தாக்கல் செய்தனர்.

அடுக்குமாடி கட்டடத்தின் தரம் குறித்து 100 இடங்களில் மாதிரிகள் எடுத்து தரம் குறித்து 441 பக்கம் கொண்ட அறிக்கையின் 59 பக்க முன் சுருக்க அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

அதில், கேபி பார்க் குடியிருப்பை கட்டிய பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும், அந்த கட்டுமான நிறுவனத்தைத் தடைப் பட்டியலில் சேர்க்கவும், அரசு ஒப்பந்தங்களில் சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு இனி ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது என்றும் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 4 அக் 2021