மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

வடகிழக்கு பருவமழை : அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

வடகிழக்கு பருவமழை : அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு ஒரு மாவட்டத்திற்கு ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “

வெள்ளம் தொடர்பான நடவடிக்கைகளை முறையாகக் கண்காணிக்க தற்காலிகமாக கட்டுப்பாட்டு அறை மாவட்ட நிலையில் ஏற்படுத்தப்படுகிறது.

பொதுமக்கள் எளிதாக அணுக 1800 425 5880 என்ற தொலைப்பேசி எண்ணும், கால்நடை அவசர சிகிச்சை ஊர்தியை அழைக்க 1962 என்ற இலவச எண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் 1,294 அவசர கால நடவடிக்கை குழுக்கள் (Emergency Response Team - 'ERT') ஏற்படுத்தப்படுகிறது.

மழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் 1,740 கால்நடை மீட்பு மையங்கள், தங்குமிடங்கள் அமைக்கப்படும்.

பாதிக்கப்பட்ட விலங்குகளை மீட்பு மையங்கள் மற்றும் முகாம்களுக்கு விரைவாக கொண்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

56 நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகள் வெள்ளத்தின்போது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும்.

பருவமழைக்கு முன்னதாக மாநிலத்தின் நோய் பரவும் அனைத்து உள்ளூர் பகுதிகளிலும் விலங்குகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

மழையின்போது கால்நடைகளுக்கு தேவையான தீவனம், குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் ப்ளீச்சிங் பவுடர் தெளித்தல், கழிவு நீர் சுத்திகரிப்பு, முறையான உரம் மற்றும் கழிவுகளை அகற்றுவதன் மூலம் நோய்கள், ஈக்கள் மற்றும் பூச்சிகள் பெருகுவதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கால்நடைகள் மற்றும் கோழிகளின் இயல்பான ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்காக 1,294 கால்நடை சுகாதார முகாம்கள் மேற்கொள்ளப்படும்.

அனைத்து களப்பணியாளர்களும் அதற்கேற்ப கவனமுடன் பணிபுரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 4 அக் 2021