மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

போலீஸார் குறைதீர்ப்பு முகாம்: இரண்டு நாட்களில் 1,554 மனு!

போலீஸார் குறைதீர்ப்பு முகாம்: இரண்டு நாட்களில் 1,554 மனு!

சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற போலீஸாருக்கான குறைதீர்ப்பு முகாமில் 1,554 மனுக்களை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பெற்றுள்ளார்.

‘உங்கள் துறையில் முதல்-அமைச்சர்’ திட்டத்தின் கீழ் போலீஸாருக்கு குறைதீர்ப்பு முகாம் நடத்தி, அதன்மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர கமிஷனர்களுக்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் போலீஸார் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

அந்த வகையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போலீஸாருக்கான குறைதீர்ப்பு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் 1,359 போலீஸார் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்தனர். போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்து மதியம் 3 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஏழரை மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து மனுக்களைப் பெற்றார்.

இந்த நிலையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போலீஸாருக்கான குறைதீர்ப்பு முகாம் இரண்டாவது நாளாக நேற்று (அக்டோபர் 3) நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் காலை 11.30 மணி முதல் மதியம் 3 மணி வரை மூன்றரை மணி நேரம் போலீஸாரிடம் மனுக்களைப் பெற்றார். நேற்று 195 போலீஸார் மனுக்களை அளித்தனர்.

இரண்டு நாட்களில் மொத்தம் 1,554 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்களில், பணி இடமாறுதல், தண்டனைக் குறைப்பு, ஊதிய முரண்பாடு களைதல், போலீஸ் குடியிருப்பு வேண்டுதல், போலீஸார் சேமநல நிதியில் இருந்து மருத்துவ உதவித்தொகை கோருதல் போன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கமிஷனர் சங்கர் ஜிவால், “போலீஸார் தந்த அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு குறைகளுக்குத் தீர்வு காணப்படும். இந்த மனுக்களில் தீர்வு காணப்பட்ட மனுக்கள், தீர்வு காணப்படாத மனுக்கள் என வகைப்படுத்தப்பட்டு, அதுகுறித்த அறிக்கை வருகிற 16ஆம் தேதி டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 4 அக் 2021